பிஞ்ச் சதம் … வார்னர் அரைசதம் – இங்கிலாந்துக்கு 286 ரன்கள் இலக்கு !

செவ்வாய், 25 ஜூன் 2019 (19:05 IST)
உலகக்கோப்பைத் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலானப் போட்டியில் ஆஸி அணி இன்னிங்ஸ் முடிவில் 285 ரன்கள் சேர்த்துள்ளது.

உலகக்கோப்பைத் தொடரில் பலம் வாய்ந்த இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை நடந்துள்ள போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 5 போட்டிகளில் வென்று இரண்டாமிடத்திலும் இங்கிலாந்து அணி 4 போட்டிகளில் வென்று 4 ஆம் இடத்திலும் உள்ளன.

டாஸில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இதையடுத்து ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிஞ்சும் வார்னரும் சிறப்பானத் தொடக்கத்தை அமைத்துக்கொடுத்தனர். அரைசதம் அடித்த வார்னர் 53 ரன்களில் ஆட்டமிழக்க தொடர்ந்து விளையாடிய பிஞ்ச் தனது சதத்தை நிறைவு செய்து 100 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் அவுட் ஆக 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் சேர்த்தது.

இங்கிலாந்து அணிக்கு இந்த வெற்றி மிகமுக்கியமானது என்பதால் வெற்றிப் பெற முழுமையாகப் போராட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்