துபாயில் ‘2.0’ இசை வெளியீட்டு விழா..

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2017 (13:07 IST)
ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழா, துபாயில் நடைபெற இருக்கிறது.


 

 
ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கியுள்ள படம் ‘2.0’. ஏற்கெனவே வெளியான ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. ரஜினிக்கு ஜோடியாக ஏமி ஜாக்சன் நடிக்க, முக்கிய வேடத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
 
இந்த வருட தீபாவளிக்கு படம் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், கிராஃபிக்ஸ் வேலைகள் முடிய கால தாமதம் ஆகும் என்பதால், அடுத்த வருட தொடக்கத்துக்கு ரிலீஸ் தேதியை மாற்றிவிட்டனர். இந்நிலையில், அக்டோபர் மாதம் இசை வெளியீட்டை நடத்த லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதுவும் இங்கல்ல, துபாயில் நடத்தப் போகிறார்களாம்.
அடுத்த கட்டுரையில்