‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ பட ஷூட்டிங்கின்போது, பல காட்சிகளை சிங்கிள் டேக்கில் நடித்து அசத்தினாராம் சிம்பு.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாக உள்ள இந்தப் படத்தில், அஸ்வின் தாத்தா மற்றும் மதுர மைக்கேல் என இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ளார் சிம்பு. அஸ்வின் தாத்தாவுக்கு ஜோடியாக தமன்னாவும், மதுர மைக்கேலுக்கு ஜோடியாக ஸ்ரேயா சரணும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் சிம்புவின் நடிப்பு குறித்துப் பேசியுள்ள ஆதிக், “அஸ்வின் தாத்தா கேரக்டருக்காக ரொம்பவே கஷ்டப்பட்டார் சிம்பு. தனது எடையை, 85 கிலோ வரை அதிகரித்தார். உடல் எடை அதிகமானதால், அவருடைய உருவமே மாறிப்போனது. அத்துடன், அந்த கெட்டப்புக்காக 3 மணி நேரம் மேக்கப் போடவேண்டும், அதைக் கலைக்க ஒரு மணி நேரம் ஆகும். அவர் படப்பிடிப்பு லேட்டாக வருவார் என்கிறார்கள். அப்படி வந்தாலும், மூன்று மணி நேரத்தில் நடிக்க வேண்டியதை, ஒரு மணி நேரத்திலேயே நடித்துக் கொடுத்து விடுவார். பல காட்சிகளை ஒரே டேக்கிலேயே நடித்து முடித்தார்” என்று தெரிவித்துள்ளார்.