சாய்பல்லவி மிஸ் செய்த படத்தில் வரலட்சுமி சரத்குமார்!

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (20:57 IST)
நடிகை பல்லவி நடிக்க வேண்டிய படத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
நடிகை வரலட்சுமி நடித்திருக்கும் திரைப்படம் ’வி3’. இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் வரலட்சுமி இதில் மாவட்ட கலெக்டராக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
ஒரு மாவட்ட கலெக்டர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளால் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார் என்பதை அப்பட்டமாக காட்டும் படமாக இந்தப் படம் இருக்கும் என்று கூறப்படுகிறது 
 
முதலில் இந்த படத்தில் நடிக்க சாய்பல்லவி ஒப்புக் கொண்டதாகவும் அதன் பின்னர் படக்குழுவினர் கேட்ட கால்ஷீட் தேதி தன்னிடம் இல்லை என்பதால் அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது வரலட்சுமி இந்த படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்