என் மூக்கு உடைந்து விட்டது - வெட்கமின்றி வெளிப்படையாக கூறிய ஸ்ருதி ஹாசன்!

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (19:53 IST)
உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன். தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். சிறு வயது முதலே தான் ஒரு பாப் பாடகர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருப்பவர். அதன் எதிரொலியாக தனது 6 வயதிலே தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் ஸ்ருதி.

சிறிது காலம் கழித்து அம்மணிக்கு பட வாய்ப்பு குறைய ரியாலிட்டி ஷோ தொகுப்பாளராக மாறினார். இருந்தும், படவாய்ப்புகள் ஏதுமின்றி வந்த ஸ்ருதிஹாசன் இதற்கிடையில் காதல் வலையில் விழ சில காலம் ஜாலியாக உலா வந்துகொண்டிருந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தங்கள் காதல் முறிந்துவிட்டதாக சமூகவலைத்தளங்களில் தெரிவித்தார். எனினும் எந்தவித டென்க்ஷனும் இன்றி சிங்கிள் பெண்ணாக ஜாலியாக சுற்றி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஸ்ருதி ஹாசனிடம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கொண்டது குறித்த கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், ஆம், நான் என் மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளேன் என்னுடைய மூக்கு உடைந்து விட்டதால் நான் அதை செய்தேன். அது இருந்த விதம் எனக்கு பிடிக்கவில்லை அதனால் நானே விருப்பப்பட்டு தான் செய்தேன் என கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்