இது எங்க ஆரம்பிச்சுதுனே தெரியல - மனம் திறந்த சமந்தா!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (20:09 IST)
எந்த நேரமும் சமந்தா தனது விவாகரத்து முடிவை அறிவிப்பார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் சமந்தா  விவாகத்து விவகாரம் குறித்து பேசியுள்ளார். 
 
நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா ஆகியவர்களுக்கு கடந்த சில மாதங்களாக கருத்துவேறுபாடு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எந்த நேரமும் சமந்தா தனது விவாகரத்து முடிவை அறிவிப்பார் என்று கூறப்பட்டு வருகிறது. 
 
எனினும் இது குறித்து வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் நாக சைதன்யா - சமந்தா தம்பதியினர் இருந்து வந்ததனர். இந்த விவகாரம் நாளுக்கு நாள் புது புது கட்டுக்கதைகளோடு பெருசா போய்க்கொண்டிருப்பதால் முதன்முறையாக சமந்தா இது குறித்து மனம் திறந்துள்ளார். 
 
நேரலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் விவகாரத்து செய்திகள் குறித்து மும்பைக்கு செல்வதை குறித்தும் உண்மையா? என கேட்டார். அதற்கு பதில் அளித்த சம்மு, "இந்த வதந்தி எங்கிருந்து தொடங்கியது என்று எனக்குத் தெரியவில்லை.  ஆனால், இதுவரை என்னை குறித்து வந்த மற்ற வதந்திகளைப் போல இதுவும் உண்மை இல்லை. ஹைதராபாத் என் வீடு, எப்போதும் என் வீடு. ஹைதராபாத் எனக்கு எல்லாவற்றையும் தருகிறது, நான் இங்கு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்வேன் என கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்