யுவ்ராஜ் சிங்குக்கு சிலை வைத்த பெருமைப் படுத்திய பஞ்சாப் கிரிக்கெட் மைதானம்!

Webdunia
ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (10:12 IST)
யுவ்ராஜ் சிங்குக்கு பெரோஸ்பூர் கிரிக்கெட் மைதானத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி கண்ட மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் யுவ்ராஜ் சிங். இந்திய அணிக்காக 2 உலகக்கோப்பை தொடரிலும் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது பெற்றார். அதுமட்டுமில்லாமல் இந்தியாவுக்கு ஒரு நிலையான பின் வரிசை ஆட்டக்காரராக 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் சிறப்பாக செயல்பட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு அவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

இந்நிலையில் அவரைப் பெருமிதப்படுத்தும் விதமாக பஞ்சாப்பில் உள்ள பெரோஸ்பூர் கிரிக்கெட் மைதானத்தில் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்