யுவராஜ் சிங் ஓய்வு: தகவலை கசிய விடும் பிசிசிஐ??

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2017 (13:07 IST)
யுவராஜ் சிங் ஓய்வு பெற உள்ளதாக வெளியாகிவரும் தகவலை பிசிசிஐ வட்டாரங்கள் கசிய விடுவதாக தகவல் வந்த வண்ணம் உள்ளன.
 
35 வயதாகும் யுவராஜ் சிங் இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல் ரவுண்டராக திகழ்ந்தார். ஆனால், இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் இந்திய அணியில் விளையாட இவருக்கு இடம் கிடைக்வில்லை.
 
இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம், வீரர்களின் உடல்தகுதி விஷயத்தில் சமரசம் ஏதுமின்றி வீரர்களை தேர்வு செய்து வருகிரது. இந்த விஷயத்தில் கேப்டன் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் உறுதியாக உள்ளனர்.  
 
யுவராஜ் சிங்கின் உடல் தகுதியை காரணம் காட்டியே போட்டிகளில் அவர் தேர்வு செய்யப்படவில்லை என செய்திகள் வெளியாகின்றன. அதற்கு ஏற்ப தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடந்த உடற்தகுதி தேர்வில் யுவராஜ் தேர்ச்சியடையவில்லை.
 
இதனால், இலைங்கைக்கு எதிரான தொடரிலும் அவர் பெயர் பரிந்துரைக்கப்பவில்லை. எனவே, தற்போது அவர் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வருகிறார்.
 
இந்நிலையில், யுவராஜ் ரஞ்சி கோப்பை தொடரில் இருந்து அதிரடியாக விலகிவிட்டு தேசிய பயிற்சி அகாடமியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் பிசிசிஐ சற்று அதிருப்தியில் உள்ளதாம்.
 
மேலும், விரைவில் தனது 36 ஆம் பிறந்தநாளை கொண்டாட இருக்கும் யுவராஜ் தீவிர பயிற்சி பெற்று தனது உடல் தகுதியை நிறுபித்து இந்திய அணியில் மீண்டும் இணைய முயற்சித்து வருகிறாராம்.
 
யுவராஜ தனனை நிறுபித்தால் இலங்கைக்கு எதிரான தொடரிலேயே அவர் இடம்பெறுவார் என கூறப்படுகிறது. ஆனால், அதன் பின்னர் தனது ஓய்வை அறிவித்துவிடுவார் என்றும் பிசிசிஐ வட்டாரங்களில் தகவல் வெளியாகிறதாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்