விடைபெறும் நெஹ்ரா: கடைசி போட்டியிலாவது விளையாட வாய்ப்பளிப்பாரா கோலி??

புதன், 1 நவம்பர் 2017 (12:15 IST)
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான நெஹ்ரா இந்திய அணியில் இருந்து ஓய்வு பெருகிறார். இன்று நியூசிலாந்துடன் நடைபெறும் போட்டியே நெஹ்ராவின் கடைசி போட்டி.


 
 
நெஹ்ரா பல கேப்டன்களுக்கு கீழ் விளையாடி இருக்கிறார். இந்தியாவிலேயே மிக அதிக கேப்டன்களுக்கு கீழ் விளையாடிய வீரர் இவர்தான். இன்று நியூசிலாந்துவுடன் நடக்க இருக்கும் டி20 போட்டியே அவர் பங்குபெறும் கடைசி சர்வதேச போட்டியாகும். 
 
1999 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார் நெஹ்ரா. இந்த போட்டியோடு அனைத்து விதமான ஐசிசி போட்டிகளில் இருந்தும் விடைபெறுகிறார். 
 
நெஹ்ரா தன்னுடைய முதல் தர போட்டியை தொடங்கியது டெல்லி மைதானத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதே அதே இடத்தில் விடைபெற இருக்கிறார்.
 
நேற்று பயிற்சியில் கூட ஈடுபடாமல் 15 நிமிடத்தில் அனைவரிடமும் பேசிவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் நெஹ்ராவின் கடைசி மேட்ச்சில் அவர் விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது. 
 
இன்று நடைபெறவுள்ள போட்டியில், பிளேயிங் லெவனில் விளையாடுவாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. கோலி இது குறித்து என்ன முடிவு எடுத்துள்ளார் என்பதும் தெரியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்