தோனியின் ஓய்வுக்கு முன் இதற்கு பதில் எங்கே? கபில் தேவ்!!

ஞாயிறு, 12 நவம்பர் 2017 (13:44 IST)
தோனியின் ஓய்வை பற்றி பேசும் முன் அவருக்கு இணையான வீரர் ஒருவரை காட்டுங்கள் என கபில் தேவ் தெரிவித்துள்ளார். 


 
 
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டில் தோல்வி அடைந்ததற்கு தோனியின் மோசமான ஆட்டம் ஒரு காரணமாக தெரிவிக்கப்பட்டது.
 
லட்சுமண், அகார்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் டி20 போட்டியில் தோனி ஓய்வு பெற்றால் சிறந்தது என வெளிப்படையாக தெரிவித்தனர். 
 
இது தற்போது ஒரு விவாதகளமாகவே மாறியுள்ளது. இந்நிலையில், இது குறித்து கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, எனது அணியில் இருந்த கவாஸ்கர் போல கோலி அணியில் தோனி இருக்கிறார். இருவருமே இந்திய அணியின் மிகப்பெரிய சொத்து. 
 
தோனி சிறப்பான கிரிக்கெட் மூளையுடன் கூடிய தன்னடக்கமான வீரர். என்னைப்பொறுத்த வரை தோனிக்கு 36 வயதானாலும் பீல்டிங்கில் இளம் வீரர்களுக்குக்கே சவால் விடும் அளவு செய்லபடுகிறார். அவருக்கு மாற்று வீரர் யாரும் இல்லாத போது, அவரை ஓய்வு பெற சொல்வதில் எந்த பயனும் இல்லை என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்