உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்ட மரண அடி!

Webdunia
புதன், 24 ஜூலை 2019 (19:48 IST)
சமீபத்தில் நடைபெற்று முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது என்பது தெரிந்ததே.
 
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோதிய நிலையில் இரண்டு அணிகளும் சம அளவில் ரன்கள் எடுத்ததால் சூப்பர் ஓவர் வீசப்பட்டது. சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் சம அளவில் ரன்கள் எடுத்ததால் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற காரணத்தால் இங்கிலாந்து அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. இந்த கோப்பை இங்கிலாந்து அணிக்கு கொடுத்ததை சர்ச்சைக்குரியதாக கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு அயர்லாந்து அணி மரண அடி கொடுத்துள்ளது. இன்று தொடங்கிய இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியை 85 ரன்களுக்கு அயர்லாந்து பந்துவீச்சாளர்கள் சுருட்டி உள்ளனர். இங்கிலாந்து அணியின் டென்லே 23 ரன்களும், ஸ்டோன் 19 ரன்களும், கர்ரான் 18 ரன்களும் எடுத்தனர். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. இதில் மூன்று பேட்ஸ்மேன்கள் டக் அவுட் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து அயர்லாந்து அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. அந்த அணி 19 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்துள்ளது . உலகக்கோப்பை முடிந்தவுடன் உலக சாம்பியனான இங்கிலாந்து அணிக்கு அயர்லாந்து அணி மரண அடி கொடுத்துள்ளது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்