இந்தாண்டு முதல் இந்தியாவில் மகளிர் ஐபிஎல் போட்டிகள் நடந்து வருகிறது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள மகளிர் ஐபிஎல் போட்டியில், இன்றைய போட்டியில் மும்பைக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் மோதின.
டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. எனவே மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.
குஜராத் அணி சார்பில், கார்ட்னர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்
இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத்அணி களமிறங்கியது. இதில், 20 ஓவர்கள் முடிவில், 107 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
இந்த அணியின் ஹர்லின் அதிகபட்சமாக 22 ரன்கள் எடுத்திருந்தார்.மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.
எனவே மும்பை அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.