மகளிர் ஐபிஎல்: 3 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்ற மும்பை..!

வெள்ளி, 10 மார்ச் 2023 (07:57 IST)
கடந்த சில நாட்களாக மகளிர் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதின. ஏற்கனவே மும்பை அணி 2 போட்டிகளில் வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது என்பதும் அதேபோல் டெல்லி அணியும் இரண்டு போட்டிகளில் வென்று  இரண்டாவது இடத்தில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க வீராங்கனை லேனிங் மட்டுமே 43 ரன்கள் எடுத்தார். 
 
இதனை அடுத்து 106 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. யாஸ்டிகா பாட்டியா 41 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். 
 
இந்த நிலையில் 3 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்றதை அடுத்து மும்பை அணி புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்