பைனலிலாவது ரெய்னாவுக்கு இடம் கிடைக்குமா?

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (14:59 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தளபதி சுரேஷ் ரெய்னா கடந்த சில போட்டிகளாக ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சிஎஸ்கே அணிக்கு தல தோனி என்றால் தளபதி சுரேஷ் ரெய்னா. சொல்லப்போனால் தோனியை விட அதிக வெற்றியை அவர் பெற்றுத் தந்திருக்கிறார். ஆனால் இந்த சீசன் ஆரம்பத்தில் இருந்தே அவர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அதனால் கடந்த இரண்டு ஆட்டங்களாக அவர் பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்ட உத்தப்பா நேற்றைய போட்டியில் இக்கட்டான கட்டத்தில் களமிறங்கிய அரைசதம் அடித்து கலக்கியுள்ளார். இதனால் அடுத்துவரும் பைனலில் சுரேஷ் ரெய்னாவுக்கு வாய்ப்புக் கிடைப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்