ரெய்னாவுக்கு இதுதான் கடைசி ஐபிஎல் தொடரா?

Webdunia
செவ்வாய், 5 அக்டோபர் 2021 (12:08 IST)
சிஎஸ்கே அணியின் முக்கியமான வீரர்களில் சுரேஷ் ரெய்னாவும் ஒருவர்.

சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு எந்தளவுக்கு கேப்டன் தோனி காரணமாக இருந்தாரோ அதே அளவுக்கு சுரேஷ் ரெய்னாவும் பங்காற்றியுள்ளார். பல இக்கட்டான நேரங்களில் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றவர். தோனி இல்லாத போது அணியை தலைமை தாங்கியவர். அதே போல ஐபிஎல் தொடரின் எல்லா சீசன்களிலும் 400 ரன்களுக்கு மேல் சேர்த்தவர்.

ஆனால் இந்த ஆண்டு அவருக்கு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்துள்ளது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடிய அவர் 160 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதனால் முதல் முறையாக அவர் அணிக்கு வெளியே உட்காரவைக்கப்பட்டு ராபின் உத்தப்பா களமிறக்கப்பட்டார். இந்நிலையில் அவரின் கடைசி ஐபிஎல் தொடர் இதுவாகதான் இருக்கும் என்ற பேச்சுகள் இப்போதே எழ ஆரம்பித்துவிட்டன.

சர்வதேச போட்டிகளில் விளையாடாததும், உள்ளூர் போட்டிகளில் கூட சிறப்பாக விளையாடாததுமே அவரின் மோசமான பார்முக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்