பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியா அணி கடந்த 31 போட்டிகளாக தோல்வியையே சந்தித்ததில்லை என்ற வரலாற்றை வைத்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரெலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் நான்காவது போட்டி நாளை பிரிஸ்பேனில் தொடங்க உள்ளது.இந்த போட்டியை வெல்லும் அணியே தொடரை வெல்லும் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
நாளை போட்டி நடக்க உள்ள பிரிஸ்பேன் மைதானம் ஆஸ்திரேலிய அணியின் முடி சூடா கோட்டையாக விளங்குகிறது. அந்த மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி கடைசியாக விளையாடிய 31 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியையே தழுவியதில்லை என்ற பெருமையோடு விளையாட உள்ளது. இந்த சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய சாதனையை இந்தியா படைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.