விராத் கோஹ்லிக்கு பெண் குழந்தை: ரசிகர்கள் வாழ்த்து!

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (16:41 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியின் மனைவியும், பிரபல பாலிவுட் பாலிவுட் அனுஷ்கா சர்மா கடந்த சில மாதங்களாக கர்ப்பமாக இருந்தார் என்பதும் அவருக்கு ஜனவரி மாதத்தில் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்து இருந்தார்கள் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் சற்று முன் அனுஷ்கா சர்மாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் தாயும் சேயும் நலம் என்றும் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் தனக்கும் அனுஷ்காவுக்கும் பெண் குழந்தை பிறந்து உள்ளதாகவும் இந்த குழந்தை புதிய உலகை சந்திக்க வந்திருப்பதாகவும் அந்த குழந்தைக்கு அனைவரின் ஆசி தேவை என்றும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார் 
 
இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கும் அவரது குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்