பெண் குழந்தைக்கு தாயான பூஜா குமார்… புகைப்படத்தை வெளியிட்ட கணவர்!

சனி, 2 ஜனவரி 2021 (13:04 IST)
நடிகை பூஜா குமாருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவரது கணவர் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

காதல் ரோஜாவே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பூஜா குமார். ஆனால் அப்போது வாய்ப்புகள் கிடைக்காததால் அமெரிக்காவுக்கு சென்று செட்டில் ஆனார். அதன் பிறகு 15 ஆண்டுகள் கழித்து கமல் நடித்த விஸ்வரூபம் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்குக் கம்பேக் கொடுத்தார். அதையடுத்து கமல் நடித்த விஸ்வரூபம் 2 மற்றும் உத்தம வில்லன் ஆகிய படங்களில் எல்லாம் நடித்தார். இந்த முறையும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து மீண்டும் அமெரிக்காவுக்கே சென்றார்.

இப்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம். இதை அவரது கணவர் விஷால் ஜோஷி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்