இந்திய அணிக்கு இன்று இறுதி போட்டி – உலக ஹாக்கி தொடர்

Webdunia
சனி, 15 ஜூன் 2019 (12:45 IST)
உலக கோப்பை கிரிக்கெட்டில் மட்டுமல்ல உலக ஹாக்கி தொடர் போட்டியிலும் இந்தியா தன் பலத்தை காட்டி வருகிறது.

முன்னதாக ஜப்பான் அணியை எதிர் கொண்டது இந்திய அணி. நடப்பு சாம்பியனான ஜப்பான் அணி ஆரம்பித்த வேகத்தில் முதல் கோல் எடுத்தாலும், தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 7 கோல்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜப்பான் 2 கோல்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகமான கோல்கள் வெற்றி பெற்றது மூலம் இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளது இந்திய அணி.

மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு இரண்டு கோல்கள் பெற்றது. ஆனால் அமெரிக்காவால் அதைக்கூட பெற முடியவில்லை. வெறும் 1 கோல் மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவும் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

இன்று மாலை நடைபெறவிருக்கும் இறுதி போட்டியில் தென் ஆபிரிக்கா-இந்தியா அணிகள் மோதவிருக்கின்றன. கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் அனைத்து விளையாட்டுகளிலும் நம்மாட்கள் வெற்றி கொடி நாட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்