பிரபல டென்னிஸ் வீரர் நடாலுக்கு கொரோனா தொற்று உறுதி

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (19:14 IST)
பிரபல டென்னிஸ் வீரர் நடாலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களில் ஒருவர் நடால் என்பதும் இவர் பல்வேறு சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் கொரனோ வைரஸ் உலகம் முழுவதும் படிபடியாக பரவிவரும் நிலையில் அதில் சில விஐபிக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களில் ஒருவரான ரபேல் நடாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சமீபத்தில் அபுதாபியில் நடைபெற்ற அபுதாபி ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்று சொந்த நாட்டுக்கு திரும்பிய நடாலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்