சுஷாந்த் சிங் ராஜ்புட். .. தல தோனி வருத்தம்

Webdunia
திங்கள், 15 ஜூன் 2020 (23:28 IST)
பிரபல ஹிந்தி திரைப்பட நடிகரும் தோனியின் சுயசரிதைப் படத்தில் நாயகனாக நடித்தவருமான சுஷாந்த் சிங் ராஜ்புட் நேற்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இது இந்தியாவில் உள்ள அத்துனை சினிமா வட்டாரங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் தோனியின் மேலாளரும் எம்.எச்.தோனி படத்தின் தயாரிப்பாளருமான அருண் பாண்டே  சுஷாந்தின் மறைவு தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், தோனியும் சுஷாந்தின் மறைவு குறித்து வருத்தத்தில் உள்ளதாகவும் ஒரு சிறப்பான எதிர்க்காலம் அவருக்குக் காத்துக் கொண்டிருந்தது. ஆனால் 34 வயதிலேயே ஒரு துயரமான சம்பவம் நடந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்