ஒரே நாளில் இலங்கையை காலி செய்த இந்தியா

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2017 (16:06 IST)
இலங்கை - இந்தியா அணிகள் இடையே நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று பேட்டிங் செய்து வரும் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.


 
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில் இன்று நாக்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ர இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. 
 
அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பத்திலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி ஜடேஜா மற்றும் அஸ்வின் சுழலில் திணறியது. அஸ்வின் 4 விக்கெட்டுகளும் ஜடேஜா மற்றும் இஷாந்த் சர்மா தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஒரே நாளில் இலங்கை அணி சுருண்டது. 205 ரன்கள் குவித்த நிலையில் ஆல் ஆவுட் ஆனது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்