ஐக்கிய அரபு அணியை புரட்டி எடுத்த இலங்கை: 79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (17:26 IST)
உலகக் கோப்பை பயிற்சி போட்டியில் ஐக்கிய அரபு அணியை புரட்டி எடுத்த இலங்கை அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. 
 
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் பயிற்சி போட்டி இன்று இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் இடையே நடந்தது.
 
இந்த போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 153 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 17.1 ஓவர்களில் 73 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதனை அடுத்து இலங்கை அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது புள்ளி பட்டியலில் இலங்கை அணி 2 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. முதல் இரண்டு இடத்தில் நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்