உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் பயிற்சி ஆட்டங்கள் மற்றும் தகுதிச்சுற்று போட்டிகள்தற்போது நடைபெற்று வருகின்றன
இந்த நிலையில் இன்று இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது
இந்த போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்த 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் மெண்டிஸ் மிக அபாரமாக விளையாடி விளையாடிய 79 ரன்கள் அடித்தார்
அதன்பின் 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இருப்பினும் தொடக்க ஆட்டக்காரர் மேக்ஸ் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் புள்ளி பட்டியலில் இலங்கை தற்போது 4 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது