உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரை அடுத்து வங்கதேச அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடந்த 26ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அந்தப் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது
இந்த நிலையில் நேற்று இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 44.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 242 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இலங்கை அணியின் பெர்னாண்டோ 82 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்
இந்த வெற்றியை அடுத்து இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை வென்றது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 31ஆம் தேதி நடை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது