முதலாவதாக நடந்த கோவை மற்றும் திருச்சி அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய திருச்சி அணியினர் 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய அந்தோனிதாஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்
இதனை அடுத்து நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் திண்டுக்கல் மட்டும் தூத்துக்குடி அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. ஜெகதீசன் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். அதேபோல் கேப்டன் அஸ்வினும் 28 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். இதனை அடுத்து 174 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தூத்துக்குடி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்ததால் திண்டுக்கல் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராமலிங்கம் ரோஹித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்