டிசில்வா சதம்: டிராவை நோக்கி செல்கிறதா டெல்லி டெஸ்ட்

Webdunia
புதன், 6 டிசம்பர் 2017 (13:47 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே டெல்லியில் நடைபெற்று வரும் 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 410 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வரும் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்துள்ளதால் இந்த போட்டி டிராவை நோக்கி செல்வதாக தெரிகிறது.
 
முன்னதாக நேற்று இரண்டாவது இன்னிங்ஸில் 246 ரன்கள் எடுத்த இந்தியா, இலங்கை அணி வெற்றி பெற 410 என்ற இலக்கை கொடுத்தது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் என்று தத்தளித்த இலங்கை அணி இன்று சுதாரித்து விளையாடி வருகிறது. 
 
இலங்கை அணியின் டிசில்வா 119 ரன்களுடனும், சில்வா 27 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். கேப்டன் சண்டிமால் 36 ரன்களிலும், மாத்யூஸ் ஒரு ரன்னிலும் அவுட் ஆகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்னும் சில மணிநேரங்களே ஆட்டம் மீதியுள்ள நிலையில் இன்னும் ஐந்து விக்கெட்டுக்களை இந்திய அணி எடுக்கவில்லை எனில் இந்த போட்டி டிராவில் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்