ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை; காரணம் என்ன?

Webdunia
புதன், 6 டிசம்பர் 2017 (11:31 IST)
ரஷ்ய வீர்ர் வீராங்கனைகள் ஊக்க மருந்து உட்கொண்டதால் 2018- குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்க  ஒலிம்பிக் கமிட்டி  தடை விதித்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள சோச்சி மாகாணத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன. இதில் ரஷ்ய வீரர்கள் ஊக்கமருந்து உட்கொண்டதாக புகார் எழுந்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த ஒலிம்பிக் கமிட்டி  தீர்பளித்தது. ஊக்க மருந்து தடுப்பமைப்பு  நடத்திய சோதனையில் ரஷ்ய வீர்ர்கள் ஊக்க மருந்து உட்கொண்டது உறுதியாகியுள்ளது.
 
இந்நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில், ரஷ்ய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு அளித்த அறிக்கையின்படி ரஷ்ய வீரர், வீராங்கனைகள் தென்கொரியாவின் பையோங்சாங்க் நகரில் 2018-ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாக அறிவித்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்