இன்று நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது தென் ஆப்பிரிக்கா அணியின் ஒரு கட்டத்தில் 44 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு 200க்கும் மேல் இலக்கை அளித்துள்ளது
இன்றைய போட்டிஉஒ; டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. நட்சத்திர ஆட்டக்காரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆனாலும் டேவிட் மில்லர் மற்றும் தனி ஆளாக அணியின் ஸ்கோரை நிமிர்த்தினார். அவர் 116 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்
இதனால் தென் ஆப்பிரிக்கா அணியின் ஸ்கோர் 49.4 ஓவர்களில் 212 என உயர்ந்துள்ளது. இன்னும் சில நிமிடங்களில் 213 என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா விளையாட உள்ளது.
அரை இறுதியை பொருத்தவரை இந்த இலக்கு மிகவும் குறைவுதான் என்றாலும் தென்னாப்பிரிக்கா அபாரமாக பந்து வீசினால் ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்த வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவில் நீண்ட பேட்டிங் வரிசையும் இருப்பதால் அந்த அணிக்கு இது எளிதான இலக்கு தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஏதாவது மாயாஜாலம் செய்து தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்