இந்த நிலையில் இன்று கொல்கத்தாவில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தோன்றி உள்ளதை அடுத்து மேற்குவங்க மாநிலத்தில் குறிப்பாக கொல்கத்தாவில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்றைய போட்டி முழுமையாக நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.