இந்த லாஜிக் பார்த்தால் யாரும் யாருக்கும் உதவி செய்ய முடியாது…. சந்தீப் ஷர்மா டீவிட்!

வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (08:50 IST)
ஐபிஎல் தொடர்களின் மூலம் கவனம் பெற்ற சந்தீப் சர்மா விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டத்துக்கு பாடகி ரிஹானா, கிரேட்டா தென்பர்க் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் ஆதரவு தெரிவித்ததும் இதுவரை கமுக்கமாக இருந்த விளையாட்டு வீரர்கள் பலரும் ‘இது உள்நாட்டுப் பிரச்சனை. வெளிநாட்டவர்கள் தலையிடக் கூடாது’ என கூறிவருகின்றனர். இதனால் அவர்கள் ரசிகர்களால் கேலி செய்யப்பட்டும் வருகின்றனர்.

இந்நிலையில் இளம் கிரிக்கெட் வீரரான சந்தீப் சர்மா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘இந்த லாஜிக் படி பார்த்தால் ஒருவர் மற்றவருக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. ஏனென்றால் அவரவர்க்கும் உள்ளுக்குள் ஒரு பிரச்சனை இருக்கும்’ எனக் கூறி சக கிரிக்கெட் வீரர்களை சாடியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்