பிஸ்டல் அல்லது ரிவால்வருக்கு லைசன்ஸ் வேண்டும்: தோனியின் மனைவி விண்ணப்பம்!

Webdunia
புதன், 20 ஜூன் 2018 (16:27 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் தோனினியின் மனைவி சாக்‌ஷி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி தூப்பாக்கி வைத்துக்கொள்ள லைசன்ஸ் வேண்டும் என விண்ணப்பித்துள்ளார். 
 
இதற்கு முன்னர் கடந்த 2010 ஆம் ஆண்டு தோனி தனது பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள லைசன்ஸ் வாங்கினார். இதற்கு முன்னர் இவர் 2008 ஆம் ஆண்டு 9எம்எம் துப்பாக்கி வைத்திருக்க லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்த போது அதனை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்புவதற்கு முன்பாக, தோனியிடம் நற்சான்றிதழ் வழங்குமாறு ராஞ்சி நிர்வாகம் கேட்டிருந்தது. 
 
இந்த விவகாரத்தால் அந்த சமயத்தில் அவருக்கு லைசன்ஸ் கிடைக்கவில்லை. அதன்பிறகு 2010-ல் தோனிக்கு லைசன்ஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவரது மனைவி சாக்‌ஷி, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக எண்ணி, பிஸ்டல் அல்லது ரிவால்வர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு லைசென்ஸ் தரும்படி விண்ணப்பித்துள்ளார். 
 
தோனி கிரிக்கெட் விளையாட சென்றுவிடுவதால், பெரும்பாலான நேரங்களில் வீட்டில் தனியாக இருப்பதாகவும், மேலும் தனிப்பட்ட வேலைக்காரணமாக வெளியில் தனியாக செல்ல இருப்பதாலும், உயிருக்கு ஆபத்து உள்ளது என கூறி விண்ணப்பித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்