கால்பந்து வரலாற்றிலேயே இதுதான் அதிக கோல்! – சாதனை படைத்த ரொனால்டோ!

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (12:07 IST)
கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ நேற்றைய கால்பந்து போட்டியில் அடித்த ஹாட்ரிக் கோல் மூலம் கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரராக சாதனை படைத்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் சூப்பர் ஸ்டார் கால்பந்து வீரராக இருப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டு கால்பந்து வீரரான இவர் க்ளப் ஆட்டங்களில் மான்செஸ்டர் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த சில காலமாக வேறு க்ளப்களுக்கு விளையாடியவர் மீண்டும் மான்செஸ்டர் அணியில் இணைந்தார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற கால்பந்து போட்டியில் டோட்டன்ஹாம் ஹட்ஸ்பர் அணிக்கு எதிராக 3 கோல்களை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை வழங்கினார் ரொனால்டோ. நேற்று அவர் அடித்த கோல்களை சேர்த்து 805 கோல்களை அடித்துள்ளார். கால்பந்து போட்டி வரலாற்றில் ஒரே க்ளப் மற்றும் நாட்டிற்காக அதிகமான கோல்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ எட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்