அஸ்வினுக்கு சரியாக வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை… கொடுத்திருந்தால்? மனம் திறந்து பாராட்டிய கபில்தேவ்!

புதன், 9 மார்ச் 2022 (10:00 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் டெஸ்ட் போட்டிகளில் எடுத்திருந்த 434 விக்கெட்கள் என்ற சாதனையை சமீபத்தில் அஸ்வின் முறியடித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் கபில்தேவ் 434 விக்கெட்டுக்களை  எடுத்து இந்திய வீரர்களில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தார். இப்போது அந்த சாதனையை அஸ்வின் 435  விக்கெட்டுக்களை வீழ்த்தி முறியடித்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த வீரர்களின் பட்டியலில் அனில் கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த சாதனைக் குறித்து பேசியுள்ள கபில்தேவ் ‘சமீபகாலமாக அஸ்வினுக்கு சரியாக வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. அப்படி கொடுக்கப்பட்டு இருந்தால் அவர் இந்த சாதனையை இன்னும் சீக்கிரமே கடந்திருப்பார். அஸ்வின் 500 விக்கெட்களை இலக்காக கொண்டு விளையாட வேண்டும். அதைத் தாண்டியும் அவரால் செல்ல முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்