இரண்டாவது பந்தில் ரிஸ்க் எடுத்த ரிஷப் பந்த்; சதத்தை தவறவிட்ட கோஹ்லி

Webdunia
சனி, 18 ஆகஸ்ட் 2018 (22:42 IST)
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் பேட்டிங் செய்துவரும் நிலையில் கேப்டன் கோஹ்லி 3 ரன்களில் சதத்தை தவறவிட்டார்.

 
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
 
82 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தபோது இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி மற்றும் துணை கேப்டன் ராஹானே பொறுப்பை உணர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவர் அரைசதம் விளாசி அசத்தினர். 
 
இருவரும் சதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஹானே 81 ரன்களில் ஆட்டமிழந்தார். கோஹ்லி 3 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இவர்களின் கூட்டணி இந்திய அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றது.
 
ரிஷப் பந்த் இந்த போட்டி மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியுள்ளார். கோஹ்லி வெளியேறிய பின் களமிறங்கிய ரிஷப் பந்த் அவர் சந்தித்த இரண்டாவது பந்திலே சிக்ஸர் விளாசி அசத்தினார்.
 
இது தைரியமான ரிஸ்க் என்று பலரும் பாராட்டியுள்ளனர். தற்போது ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பந்த் களத்தில் உள்ளனர். இந்திய 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு தற்போது வரை 294 ரன்கள் குவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்