கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

Siva
வியாழன், 16 மே 2024 (06:59 IST)
நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பஞ்சாப் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.  நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, பஞ்சாப் அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது . பராக் மட்டுமே ஓரளவு நிலைத்து விளையாடி 48 ரன்கள் எடுத்தார்.

இதனை எடுத்து 145 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி முதல் ஓவரில் விக்கெட்டை இழந்தாலும் அதன் பிறகு கேப்டன் சாம் கர்ரன் அபாரமான பேட்டிங் காரணமாக 18.5 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணி அடுத்த சுற்றுக்கு செல்ல முடியாவிட்டாலும் அந்த அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைத்துள்ளது. அந்த அணி 10 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் அணிக்கு இந்த தோல்வி எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றும் வழக்கம் போல அந்த அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்