யாராலும் என்னை வீழ்த்த முடியாது; அதிவேக மனிதன் உசைன் போல்ட்

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (10:45 IST)
ஓட்டப்பந்தயத்தில் தனது சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது என்று உலக சாம்பியன் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார்.


 

 
100 மீ ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை படைத்துள்ள உசைன் போல்ட் உலகின் அதிவேக மனிதனாக கருதப்படுகிறார். இவர் இதுவரை பங்கேற்ற ஒலிம்பிக் போட்டியில் 8 தங்கம் வென்றுள்ளார். லண்டனில் நாளை தொடங்க உள்ள உலக தடகள போட்டியில் பங்கேற்கும் அவருக்கு 5ஆம் தேதி நடக்கவுள்ள ஓட்டப்பந்தயம்தான் கடைசி. இதோடு அவர் ஒய்வு பெறுகிறார்.
 
இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-
 
இப்போதும் உலகின் அதிவேக மனிதன் நான்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனது சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது என்று நம்புகிறேன் என்றார்.
 
மேலும் ஊக்க மருந்து பயன்படுத்துவோரை எந்த காரணத்தை கொண்டும் போட்டிகளில் அனுமதிக்க கூடாது. இதனால் தடகள போட்டியே மடிந்து போய்விடும் என்றும் தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்