வில்லியம்ஸன், டெய்லர் சிறப்பான ஆட்டம் – 51 ரன்கள் முன்னிலையில் நியுசிலாந்து !

Webdunia
சனி, 22 பிப்ரவரி 2020 (12:52 IST)
கேன் வில்லியம்ஸன்

நியுசிலாந்து இரண்டாவது நாளின் முடிவில் 216 ரன்களை சேர்த்து 5 விக்கெட்களை இழந்துள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று வெல்லிங்டனில் நேற்று தொடங்கிய முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஏமாற்றம் அளித்தனர். நேற்றைய முதல் நாளில் மழை காரணமாக 55 ஓவர்களில் போட்டி நிறுத்தப்பட்டது. நேற்றைய போட்டி முடிவில் இந்தியா 122 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்திருந்தது. பின்னர் இன்று தொடங்கிய நிலையில் மேற்கொண்டு 43 ரன்கள் மட்டுமே சேர்த்து 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதையடுத்து நியுசிலாந்து அணி தன் முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடியது. அந்த அணியின் கேன் வில்லியம்ஸன் 89 ரன்களும்  ராஸ் டெய்லர் 44 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் நியுசி. 216 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து 51 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்தியா சார்பில் இஷாந்த் ஷர்மா அதிகபட்சமாக 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்