என்னைக் கொலை செய்துவிடுங்கள் அம்மா – 9 வயது சிறுவனின் அழுகை !

சனி, 22 பிப்ரவரி 2020 (11:38 IST)
தன் தாயிடம் அழும் குவாடன்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தன்னை யாராவது கொலை செய்துவிடுங்கள் என தன்னுடைய அம்மாவிடம் அழுது புலம்பும் வீடியோ காண்
போரைக் கண்கலங்க வைத்துள்ளது.


ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த குவாடன் எனும் சிறுவனுக்கு பிறவியிலேயே எலும்புகள் சரியாக வளராத நோயான அகான்ட்ரோபலாசியா இருந்துள்ளது. இதனால் மற்றவர்களை விடக் குள்ளமாக அவர் இருப்பதால் சக மாணவர்களின் கேலிக்கு ஆளாகியுள்ளார்.

இதனால் மனமுடைந்த அந்த சிறுவன் தன்னுடைய தாயிடம் ‘ஒரு கயிறு கொடுங்கள் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். இல்லையென்றால் என்னை நீங்களே கொலை செய்துவிடுங்கள். என்னுடைய இதயத்தில் கத்தியால் குத்திக் கொள்ள வேண்டும் போல இருக்கிறது’ எனக் கூறி கட்டுப்படுத்த முடியாமல் அழுகிறான். இதனை வீடியோவாக எடுத்த அவனுடைய தாய் அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் அதனோடு ‘ஒரு தாயாக நானும், நமது கல்வி முறையும் தோற்றுவிட்டோம். உருவ கேலி எத்தகைய விளைவுகளை உருவாக்கும் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்