நானும் என் மனைவியும் ஒரே இடத்தில் இருந்தது இல்லை – விராட் கோலியின் ஜாலி பேட்டி !!!

Webdunia
வியாழன், 2 ஏப்ரல் 2020 (22:14 IST)
இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 69 ஆக அதிகரிப்பு. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 69 ஆக அதிகரித்துள்ளது.  எனவெ மகாராஷ்டிராவில் 416 பேருக்கு கொரோனா பாதிப்பு- நாடு முழுவதும் பாதிக்கபட்டோர் எண்ணிக்கை 2372 ஆக அதிகரித்துள்ளது.


இந்நிலையில், கொரோனா தடுப்பு குறித்து பல்வேறு பிரபலங்கள் பேட்டியும், வீடியோ பகிர்ந்து வருகின்றனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போது வர்ணனையாளராக இருக்கும் கெவின் பீட்டர்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவைப் பேட்டிஎடுத்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இன்று மாலை 7 மணிக்கு பீட்டர்சன் எடுத்துள்ள பேட்டியில், விராட் பல விசயங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த உரையாடலின்போது, ஊரடங்கு உத்தரவு குறித்து கோலி, ’’ஊரடங்கு உத்தரவுக்கு முன் நானும் எனது மனைவியும் இவ்வளவு நாட்களாக ஒரே இடத்தில் ஒன்றாக நேரத்தை செலவிட்டதில்லை. ஆனால் தற்போது இந்த நேரத்தை பயன்படுத்துகிறோம்’’’ என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்