சர்வதேசக் கிரிக்கெட்டில் 10000 ரன்கள்…. மிதாலிராஜின் அடுத்த சாதனை!

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (15:34 IST)
இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் சர்வதேசக் கிரிக்கெட்டில் 10000 ரன்களைக் கடந்துள்ளார்.

இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் அடையாளமாகத் திகழ்பவர் மிதாலி ராஜ். கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 20 ஆண்டுகளை அவர் கடந்துள்ளார். இந்நிலையில் இப்போது சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் 10000 ரன்களைக் கடந்த இரண்டாவது வீராங்கனை என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

இதற்கு முன்னதாக இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ் 309 போட்டிகளில் 10,273 ரன்கள் எடுத்து கடந்த 2016ம் ஆண்டிலேயே ஓய்வு பெற்றுவிட்டார். அதனால் விரைவிலேயே மிதாலி ராஜ் முதலிடத்துக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்