மாஸ்டர் vs விஸ்வாசம்… 50 ஆவது நாளில் சாதித்தது யார்?

புதன், 10 மார்ச் 2021 (15:17 IST)
விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் சமீபத்தில் 50 ஆவது நாளைக் கடந்து சாதித்தது.

மாஸ்டர் திரைப்படம் 50 சதவீத இருக்கைகளோடு வெளியான நிலையில் பெரும்பாலான திரையரங்குகள் அந்த விதியைக் கடைபிடிக்காமலும் அதிக விலைக்கு டிக்கெட்களை விற்றும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஆனால் சில நாட்கள் கூட்டத்துக்கு படத்துக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு இல்லை என்றும் ஓடாத படத்தை ஓடியதாக பொய்க் கணக்கு காட்டுவதாகவும் சிலர் கிண்டல் செய்தும் வருகின்றனர். ஆனாலும் எப்படி பார்த்தாலும் திரையரங்குகளுக்கு மாஸ்டர் திரைப்படம் உயிர்க்கொடுத்துள்ளது உண்மைதான் என திரைவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் 50 நாட்களைக் கடந்துள்ள மாஸ்டர் திரைப்படம் இப்போதும் 134 திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறதாம். சில வருடங்களாக அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்ற விஸ்வாசம் திரைப்படம் 50 ஆவது நாளில் 124 திரைகளில் ஓடிக்கொண்டு இருந்ததாம். இப்போது இதை ஒரு சாதனையாக விஜய் ரசிகர்கள் சமுகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்