மேஜர் லீக் கிரிக்கெட்: லாஸ் ஏஞ்சல்ஸ் அணி 50 ரன்களில் ஆல்-அவுட்.. நியூயார்க் அபாரம்..!

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2023 (07:31 IST)
இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவது போல் தற்போது அமெரிக்காவில் மேஜர்லீக் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. 
 
இந்த நிலையில் நேற்று லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க் அணிகள் மோதிய நிலையில் இதில் லாஸ் ஏஞ்சல் அணி வெறும் 50 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டம் இழந்தது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 
 
 நியூயார்க் அணியின் ஐந்து பவுலர்களும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். முன்னதாக முதலில் பேட்டிங் செய்த நியூயார்க் அணி 155 ரன்கள் எடுத்ததால் அந்த அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.  இதனை அடுத்து நியூயார்க் அணி புள்ளி பட்டியலில் இரண்டு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்