இறுதிப் போட்டியில் தோல்வியே சந்திக்காத கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (10:43 IST)
ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை தேர்வான இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த தொடரில் கொல்கத்தா அணியின் நிலைமை அதளபாதாளத்தில் இருந்த நிலையில் இரண்டாவது பகுதியில் சிறப்பாக விளையாடி நான்காவது அணியாக ப்ளே ஆஃப்க்கு சென்றது. அதன் பின்னர் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகளை வெற்றி பெற்று இப்போது இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

இறுதிப் போட்டியில் அசுர பலத்தோடு இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு மோத உள்ளது. ஆனால் கே கே ஆர் அணிக்கு பலம் என்னவென்றால் இதுவரை விளையாடிய இரண்டு இறுதிப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதில் ஒரு போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு மோதியது. இதனால் சென்னை அணிக்கு பலத்த போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்