“அஷ்வினை உட்காரவைத்தால் கோலியையும் உட்காரவைக்க வேண்டும்”… முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து!

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (10:22 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக மிக மோசமான ஃபார்மில் இருக்கிறார்.

இதனால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகளவில் எழுந்துள்ளன. பலரும்  விராட் கோலி தன்னுடைய உச்சத்தை கடந்துவிட்டார். அவரால் இனிமேல் மீண்டும் பழைய கோலியாக விளையாட முடியாது எனக் கூறி வருகின்றனர். இதையடுத்து தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கோலியை ஆடும் லெவனில் வைக்காமல் பென்ச்சில் உட்காரவைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் சமீபத்தில் தெரிவித்த கருத்தில் “சமீபத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் உலகின் நம்பர் 2 டெஸ்ட் பவுலரை உட்காரவைத்துள்ளார்கள். அப்படி என்றால் ஒரு காலத்தில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருந்தவரையும் உட்காரவைக்க வேண்டும்.  ப்ளேயிங் லெவன் என்பது தற்போதைய செயல்திறனை வைத்து அமையவேண்டும். வீரர்களின் கடந்தகால சாதனைகளை வைத்தல்ல. நம்மிடம் திறமையான பல இளம் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களை நாம் வெளியில் அமரவைப்பது நல்லதல்ல.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்