ஒரே சதம், உச்சத்தில் ஜேசன் ஹோல்டர் – ஐசிசி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2019 (12:16 IST)
சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 8 ஆவது வீரராக இறங்கி இரட்டை சதம் அடித்த ஜேசன் ஹோல்டர் ஆல்ரவுண்டர்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான பார்பேடோஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில்  வெஸ்ட் இண்டீஸ் ஆணி 384 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைப் பதிவு செய்தது. இது வெஸ்ட் இண்டீஸின் மிகப்பெரிய வெற்றியாக அமைந்துள்ளது.

இந்த வெற்றிக்கு முக்கியக்காரணமாக அமைந்தது இரண்டாவது இன்னிங்ஸில் 8 ஆவது வீரராக களமிறங்கி ஹோல்டர் அடித்த அதிரடி இரட்டை சதமாகும். இந்த இரட்டை சதத்தின் மூலம் ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர்களுக்கானப் பட்டியலில் ஜேசன் ஹோல்டர் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த ஒரே இன்னிங்ஸின் மூலம் 440 புள்ளிகள் பெற்ற அவர் ஷாகிப் அல் ஹசன், ஜடேஜாவைப் பின்னுக்குத்தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் 44 ஆண்டுகளுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த ஒருவர் ஆல்ரவுண்டர்களின் தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கேரி சோபர்ஸ் 1974 ஆம் ஆண்டு ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் முதலிடம் வகித்திருந்தார்.

ஹோல்டர் பேட்டிங்கிலும் 58-ஆம் இடத்திலிருந்து 33ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்