இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற வெஸ்ட் இண்டீஸ்… 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்திய ஜேசன் ஹோல்டர்

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (10:03 IST)
வெஸ்ட் இண்டீஸூக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இங்கிலாந்து அணி டி 20 தொடரை 3-2 என்ற கணக்கில் இழந்துள்ளது.

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. நான்கு போட்டிகள் முடிந்த நிலையில் 2-2 என்ற சமநிலையில் இருந்த நிலையில் ஐந்தாவது போட்டி நேற்று பார்படாஸில் நடந்தது.

இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 179 ரன்கள் சேர்த்தது. அதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 162 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியின் 20 ஓவரை வீசிய ஜேசன் ஹோல்டர் ஜோர்டன், சாம் பில்லிங்ஸ், அதில் ரஷித் மற்றும் சஹீப் மகம்முது ஆகிய நான்கு பேரையும் வரிசையாக 4 பந்துகளில் அவுட் ஆக்கி சாதனை படைத்தார். இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்