தற்போது சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடுகிறார். இந்த ஆண்டு அவர் தலைமையேற்கும் சி எஸ் கே அணி மிகமோசமாக விளையாடி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த முறை ருத்துராஜ் கேப்டனாக செயல்பட்ட நிலையில் பாதியிலேயே வெளியேறிவிட்டதால் அவருக்குப் பதில் தோனி தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
இந்நிலையில் சென்னை அணியின் ரசிகரும் வர்ணனையாளருமான ஸ்ரீகாந்த் சென்னை அணியின் கேப்டன் தோனியைக் கடுமையாக சாடியுள்ளார். அதில் “சென்னை அணியில் டாப் ஆர்டர் பேட்டிங் சரியில்லை. தோனியால் சுழல்பந்தை விளையாட முடியவில்லை. அவர் வந்தாலே சுழலர்கள் அவரைக் கட்டிப் போட்டு விடுகின்றனர். வயது மூப்பால் அவரால் தேவையான உடல்தகுதியைப் பெற முடியவில்லை. தோனி என்னால் விளையாட முடியவில்லை என்று சொல்லிவிட்டு விலகவேண்டும். ஆனால் அதை அவர்தான் சொல்லவேண்டும்” எனக் கூறியுள்ளார்.