நீ எனக்கு பியர்கள் வாங்கித் தரவேண்டும் – ஜாக் லீச்சிடம் நாதன் லயன் நகைச்சுவை !

Webdunia
புதன், 18 செப்டம்பர் 2019 (08:18 IST)
ஆஷஸ் தொடரில் முக்கியமான ஒரு கட்டத்தில் ஜாக் லீச்சின் ரன் அவுட்டை தவற விட்ட நாதன் லயன் ஜாக் லீச்சிடம் பியர் வாங்கித் தர சொல்லி கூறியுள்ளார்.  

ஆஷஸ் தொடரின் வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது போட்டியில் பென் ஸ்டோக்ஸும் ஜாக் லீச்சும் டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் தரமான பாட்னர்ஷிப் ஒன்றை நிகழ்த்தினர். அந்தப் போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க சதமடித்த பென் ஸ்டோக்ஸுக்கு பிறகு அதிகம் கவனம் பெற்றவர் ஜாக் லீச். ஆனால் அவர் அடித்தது ஒரே ஒரு ரன்.

இக்கட்டான நிலையில் அவர் ரன் அவுட் ஆகும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார் நாதன் லயன். இதனால் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி கைநழுவிப் போனது. இது குறித்து இப்போது பகிர்ந்து கொண்டுள்ள ஜாக் லீச் நாதன் லயன் என்னிடம் வந்து ‘ உன்னை நான் காப்பாற்றி இருக்கிறேன்.நீ எனக்கு எத்தனை பியர்கள் கடன் பட்டிருக்கிறாய் தெரியுமா என வேடிக்கையாகக் கேட்டார்.’ எனக் கூறி தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்