ரசிகர்களை கவர புதிய தொழில்நுட்பத்துடன் களமிறங்கும் ஐபிஎல்

Webdunia
வெள்ளி, 19 ஜனவரி 2018 (15:15 IST)
ஐபிஎல் போட்டிக்கான ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ள ஸ்டார் நிறுவனம், போட்டியை விர்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலம் பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளது.

 
இந்த வருடம் ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஐபிஎல் போட்டியில் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளது. 2022ஆம் ஆண்டு வரை அனைத்து ஐபிஎல் போட்டிகளையும் ஸ்டார் நிறுவனம் ஒளிபரப்பும்.
 
ஐபிஎல் போட்டிகளை ஹாட் ஸ்டார் ஆப் மூலமும் பார்க்க முடியும். தற்போது புதிதாக விர்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பமும் சேர்க்கப்பட்டு உள்ளது. விஆர் என்ற தேர்வை தேர்வு செய்வதன் மூலம் போட்டிகளை விர்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்ப சாதனத்தில் கண்டு ரசிக்கலாம்.
 
இந்த புதிய முறை ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்